இதை தெரிஞ்சிக்கோங்க..! எதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத் தரக்கூடிய, ருத்ராட்சம்..!

6 முக ருத்ராட்சம் கார்த்திகேய என்று அழைக்கப்படுகிறது. இதை ஆளும் கோள் வெள்ளி ஆகும். சிவபெருமானின் இரண்டாவது மகனான கார்த்திகேயன் கடவுளைக் குறிக்கும் இந்த ருத்ராட்சம் வலதுகையில் அணிந்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. எப்போதும் ஒருவித அச்சத்துடனும், மனதில் படபடப்பையும் கொண்டு இருப்பவர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் தோற்றத்தில் பொலிவு கூடும்,மனதிலும் தைரியம் பிறக்கும். வாக்கில் நேர்மையும் கம்பீரமும் உண்டாகும்.குறிப்பாக பெண்களுக்கு சுப்ரமணியன் அம்சமாய் அமைந்து கர்ப்ப தோஷத்தை நீக்குகிறது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஸ்வாமி கார்த்திகேய நமஹ…

7 முக ருத்ராட்சம் மகாலஷ்மியைக் குறிக்கும். இவை அனந்த என்று அழைக்கப்படுகிறது. இவற்றை ஆளும் கோள் சனி. பூலோக சுகங்களைக் குறையில்லாமல் பெற்று வாழ்வில் மேன்மைகளைப் பெறுவதற்கு இந்த வகை ருத்ராட்சத்தை அணியலாம். விஷ ஜந்துக்களும்,நாக பயங்களையும் உடையவர்களின் பயத்தை இவை நீக்குகிறது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் மஹாலட்சுமியே நமஹ…

8 முக ருத்ராட்சம் துர்காதேவியின் அம்சமாக சொல்லப்படுகிறது. இதை ஆளும் கோள் ராகு. இதன் பகவான் விநாயகர் என்பதால் இவை விநாயக என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதை அணிபவர்களுக்கு சகல வெற்றிகளும், எல்லா பேறுகளும் எதிரிகள் இல்லாத நிலையும் உண்டாகும். இவை விநாயகரின் ரூபமாகவும் அஷ்ட வசுக்களின் தத்துவத்துடனும் திகழ்கிறது. இந்த எட்டு முக ருத்ராட்சத்தை கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் கணேசாய நமஹ.

9 முக ருத்ராட்சம் பைரவ ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்காதேவியின் அம்சமாக இது கருதப்படுகிறது. இதை அணிபவர்கள் இந்திரனுக்கு நிகராக வாழ்வார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். சக்தியின் அருளால் இதை அணிபவர்களுக்கு வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் நவதுர்காய நமஹ.

10 முக ருத்ராட்சம் தசமுக என்று அழைக்கப்படுகிறது. இவற்றை ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. இதை அணிந்தால் நவகிரக கோள்களினால் ஏற்படும் அனைத்து தீய பலன்களிலிருந்தும் காக்கும். இவரது சந்ததியினரையும் காக்கும் தன்மை இந்த ருத்ராட்சத்துக்கு உண்டு. சிவபுராணம் இந்த ருத்ராட்சத்தை சாட்சாத் விஷ்ணுவின் சொரூபம் என்றே வர்ணிக்கிறது. குறிப்பாக பத்து திசைகள்,பத்து அவதாரங்களின் செல்வாக்குடன் திகழ்ந்து எதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத்தரக்கூடியது.

இந்த ருத்ராட் சத்துக்கான மந்திரம் –ஸ்ரீ நாராயணாய நமஹ…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *