இதை தெரிஞ்சிக்கோங்க..! இன்று இந்த ரெண்டெழுத்து நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு, சிறப்பான பலன்கள் உண்டு!

னுமன் ஜெயந்தி தினத்தில் 1 வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் அனுமன் ஜெயந்தி தினத்தில் ஆலயத்திற்கு சென்று அனுமனை தரிசித்து வழிப்பட்டால் மிகவும் நல்லது. நல்ல காரியங்கள் நடக்கும்.

*அனுமன் ஜெயந்தி அன்று வழிபாடு செய்வதால் எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நாம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும். அனுமனை ராம நாமத்தால் வழிபடும் பக்தர்கள் வடைமாலை, வெற்றியை மாலை ஆகியவற்றை அணிவித்து வெண்ணெய் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

*அனுமன் ஜெயந்தி நாள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு சனிக்கிழமையும், அனுமன் வழிபாட்டிற்கு ஏற்ற நாள். எல்லா சனிக்கிழமையும் விரதமிருந்து வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

*அனுமன் ஜெயந்தி அன்று காலையில் பூஜை அறையில் அனுமனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் ராமர் அல்லது அனுமன் ஆலயத்திற்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். கடலை, பொரி, வடை, அவல், சர்க்கரை, பழங்கள் (வாழைப்பழம்), வெண்ணெய், தேன், இளநீர், ஆகியவை நைவேத்தியமாக படைக்கலாம்.

*இன்று அனுமனை வழிபட ‘ராம’ நாமம் உச்சரித்து வழிபட்டால் தீவினைகள் உங்களை அண்டாது. ஏனென்றால் ராமனின் பக்தன் அனுமன். அவரது நாமம் சொன்னால் விலகாத துன்பமே இல்லை.

உங்கள் வீட்டில் அனுமன் படம் இருந்தால், அதை தூய்மைப்படுத்தி பொட்டு வையுங்கள். பின்னர் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். அனுமனுக்கு வடை, பழங்கள், பொங்கல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கலாம். வீட்டில் அனுமன் படம் இல்லாதவர்கள் ஒரு மனை பலகையில் கோலமிட்டு ராமாயண புத்தகம் வைக்கலாம்.

இன்றைய நாளில் அனுமனுக்கு விரதம் இருக்க முடியாத நபர்கள் மதியம் மட்டும் சாப்பிட்டு, இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் சுலோகங்கள் உச்சரித்து வழிபடலாம். நாளை காலை எழுந்ததும் சுத்தமான பிறகு துளசி தீர்த்தம் பருகி விரதத்தை நிறைவு செய்யலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *