இதை தெரிஞ்சிக்கோங்க..! எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்… எப்போது குடிக்க கூடாது என்று தெரியுமா?

ணவின்றி நாம் ஓரிரு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியும் ஆனால், நீரின்றி இரண்டு நாட்களை தாண்டுவதே சிரமம்.

நீர் என்பது இவ்வுலகை சீரான முறையில் அமைக்க மட்டுமின்றி நமது உடலையும் சீரான முறையில் இயக்க முக்கியமான பொருளாக திகழ்கிறது.

சரியான இடைவேளையில் நீரை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் உடல் பாகங்களின் செயல் திறனில் குறைபாடு ஏற்பட துவங்கும், முக்கியமாக மூளையில்.

நீரை நாம் அணைத்து நேரங்களிலும் பருகிட முடியாது, சில நேரங்களில் நீரை பருகுவது தவறானது என்றும் கூறப்படுகிறது. எனவே, தண்ணீர் தினமும் எப்போது குடிக்க வேண்டும், குடிக்க கூடாது என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்…

இரண்டு டம்ளர் தண்ணீர் காலை எழுந்ததும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். இது, உங்கள் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிப்பது உடல் சக்தியை அதிகரிக்கும். இப்படி தினமும் நீர் பருகுவதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அழிந்து உடல் பாகங்கள் நன்று செயல்படும் என கூறப்படுகிறது.

உணவுக்கு முன் ஒரு டம்ளர் நீர் உணவருந்தும் அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

உணவருந்தும் போது நீர் வேண்டாம் உணவருந்தும் முன்பு அல்லது உணவருந்திய உடனே நீர் பருக வேண்டாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இது செரிமானம் செய்யும் சுரப்பியின் செயல்திறனை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

மோர் அல்லது தயிர் உணவருந்தும் போது தண்ணீருக்கு பதிலாக மோர் அல்லது தயிராய் உட்கொள்ளலாம். இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு சேர்த்து செரிமானத்திற்கும் உதவுகிறது.

பசியின் போது தண்ணீர் பசி ஏற்படுவது போல இருந்தால் முதலில் கொஞ்சம் நீர் பருகுங்கள். பத்து நிமிடம் கழித்தும் மேலும் பசிப்பது போல இருந்தால் சிறிதளவு உணவருந்துங்கள். இவ்வாறு செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சோர்வாக இருக்கும் போது தண்ணீர் நமது மூளையில் 75% மேல் தண்ணீரின் பங்கு தான் இருக்கிறது. மூளை சுறுசுறுப்பாக செயல்பட நீரின் பங்கு முக்கியமானது. வேலை நேரங்களில் நீங்கள் சோர்வாக உணரும் போது நீர் பருகுவதால் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *