கோலி, தோனி, மெஸ்ஸி எல்லாம் ஓரம்போங்க.. தலைவன் வந்துட்டான்..!!
பிரபலமான விளையாட்டு வீரர்கள், ஜாம்பவான்கள் பெருமைக்காக பாடுபடும் இந்த உலகில், அவர்களது சம்பளம், விளம்பரங்கள், முதலீடுகள் மற்றும் பல வணிக முயற்சிகள் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.
இன்றைக்கு கால்பந்து தான் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு, ஆனால் இதை கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கால்பந்து விளையாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற ஜாம்பவான்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு சிலர் ஆவர்.
ஆனால் இன்று நாம் அவர்களைப் பற்றி பேசப் போவதில்லை. அதற்கு பதிலாக, உலகின் பணக்கார விளையாட்டு வீரரான ஒரு ஜாம்பவான் பற்றி பேசுவோம். உலகின் பணக்கார விளையாட்டு வீரர் என்ற உடந் விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் ஆகியோரை நீங்கள் நினைத்தால் இது தவறு. உலகின் பணக்கார விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்.சிகாகோ புல்ஸ் கூடைப்பந்து அணியின் முன்னாள் வீரர் தான் மைக்கேல் ஜோர்டன், கூடைப்பந்தாட்டத்தில் அவருடைய ஆதிக்கத்தை இன்று வரையில் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
மைக்கேல் ஜோர்டன் விளையாட்டு போட்டிகளை வென்றது மட்டுமல்லாமல், கற்பனை செய்ய முடியாத செல்வத்தையும் பெற்றார்.60 வயதில், மைக்கேல் ஜோர்டான் 3 பில்லியன் டாலர் (ரூ. 24,863 கோடி) நிகர சொத்து மதிப்பை வைத்துள்ளார். விளையாட்டு போட்டிகள் மூலம் கிடைத்த புகழை எப்படி பணமாக்குவது என்பதில் தனி இலக்கணத்தை எழுதியவர் மைக்கேல் ஜோர்டன்.உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ஆகியுள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர்கள் பணக்காரர்களின் பட்டியலை ஆள்கிறார்கள் என்ற வழக்கமான எண்ணத்திலிருந்து விலகி, மைக்கேல் ஜோர்டனின் பயணம் அவரது கடின உழைப்புக்கு சான்றாகும். அமெரிக்காவில் இருக்கும் கருப்பின மக்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.மைக்கேல் ஜோர்டன் தனது 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை விளையாட்டின் வாயிலாக கிடைக்கும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்கவில்லை. மாறாக, இது பல உருப்படியான முதலீடுகள், சிறப்பு மிக்க கூட்டணி மற்றும் விளம்பர வருவாயின் மூலம் சம்பாதித்துள்ளார்.மெக்டொனால்ட்ஸ், கேடோரேட், ஹேன்ஸ், நைக் போன்ற முன்னணி பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்து, அவர் விளையாட்டு ஸ்பான்சர்ஷிப்பை மறுவரையறை செய்து $2.4 பில்லியன் சம்பாதித்தார்.