500 கிலோ லோடு தாங்கும் கோமாகியின் டிரைக் ஸ்கூட்டர்… இது டிவிஎஸ் எக்ஸ்எல்லையே ஓரங்கட்டும் போல…

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்துவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று கோமகி. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற எக்ஸ்எல் (XL) ஸ்கூட்டருக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கோமகி (Komaki) நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு XGT CAT 3.0 e-loader என்று பெயர் வைத்துள்ளது. அதிக எடையைத் தாங்குவதற்கு ஏற்ப மூன்று சக்கரங்கள் கொண்ட ட்ரைக் வகை ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 கிலோ வரை லோடு ஏற்றலாம் என்று கூறுகிறது கோமாகி.

அதிக அளவு பாரம் ஏற்றுவதற்கு வசதியாக வண்டியின் பின்னால் தனியாக அகலமான லோடு கேரியர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற டயர்கள் இரண்டும் 12 அங்குலமான பெரிய வீல்களாக உள்ளன.

இதை லோடு வாகனமாக மட்டுமின்றி தனிப்பட்ட பயன்பட்டுக்கும் பயன்படுத்த முடியும். மேலும், இந்த மூன்று சக்கர ஸ்கூட்டர் மாற்று திறனாளிகள் பயன்படுத்தவும் எளிமையானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேரம் பயணம் செய்யும்போது வசதியாக பின்னால் சாய்ந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. முன்பக்கத்திலும் பொருட்களை வைத்துக்கொள்ள வசதியாக அதிகமான இட வசதி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஸ்கூட்டர்களில் ஏற்றக்கூடியதைவிட அதிக அளவு சரக்குகளை இதில் தாராளமாக ஏற்றலாம்.

இத்துடன் இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 முதல் 180 கிமீ தூரம் ஓடும் என்று சொல்லப்படுகிறது. வண்டியில் இருக்கும் லோடைப் பொறுத்து ரேஞ்ச் மாறுபடும் என்று கோமாகி நிறுவனம் விளக்கியுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 1 முதல் 1.5 யூனிட் மின்சாரமே போதும் என்பதால் இந்த ஸ்கூட்டர் மின்சாரத்தை சிக்கனமாகவே செலவு செய்கிறது.

பல சென்சார்கள், ரிமோட் லாக், மொபைல் சார்ஜர், ரிப்பேர் ஸ்விட்ச் போன்ற பல தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டர் ரூ.1.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *