பெல்லி டான்ஸில் பிரபலங்களையே திரும்பி பார்க்க வைத்த கிரீத்தி ஷெட்டி.. வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கிரீத்தி ஷெட்டி வெளியிட்டுள்ள பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்று பிரபலங்களையே வியக்க வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறியிருப்பவர் கிரீத்தி ஷெட்டி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த உப்பென்னா என்ற திரைப்படம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர், வெங்கட் பிரபுவின் கஸ்டடி உள்ளிட்ட படங்களில் கிரித்தி ஷட்டி நடித்துள்ளார்.
தமிழில் தற்போது கார்த்தியுடன் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெயம் ரவியுடன் ஜெனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
உப்பெனா படத்திற்காக பிலிம் பேர் மற்றும் சைமா விருதுகள் கிரீத்தி ஷெட்டிக்கு கிடைத்தன. அதிகம் கிளாமர் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் 76 லட்சம் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலுக்கு, பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றை கிரித்தி ஷெட்டி நேற்று வெளியிட்டுள்ளார். இவரா இப்படி ஆடுகிறார் என்று பிரபலங்களும் அந்த வீடியோ பார்த்து வியந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் இன்ஸ்டாகிராமில் கடந்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் அளித்துள்ள கமென்டுகள் சுவாரசியமாக உள்ளன.
வீடியோவில் கிரீத்தி ஷெட்டிக்கு பின்னால் ஆடுபவரை எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பீர்களோ, அதேபோன்று உங்கள் பிரச்னைகளை வாழ்க்கையில் புறக்கணியுங்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். வீடியோவுக்கு பிரபலங்கள் சிலரும் கமென்ட் செய்துள்ளனர்.