கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. இதயத்தை பறக்கவிட்ட உதயநிதி!

இயக்குநரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா தனது எக்ஸ் தளத்தில் இயற்கையை கடவுளாக வணங்குவது குறித்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், மனைவியின் இந்த பதிவுக்கு க்யூட்டாக ரிப்ளை கொடுத்துள்ளார். இது தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

கிருத்திகா, சிவா, பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநர் ஆனவர். இதைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த காளி, பேப்பர் ராக்கெட் என்ற வெப்தொடரை இயக்கினார். அடுத்து கிருத்திகா இயக்கும் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடிக்க உள்ளனர். இதில், யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு காதலிக்க நேரமில்லை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கிருத்திகாவின் ஒரே ஒரு போஸ்ட்: படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கும் கிருத்திகா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிவில், இயற்கையை கடவுள் என்று நினைத்து வணங்கும் காலம் இருந்தது. நாம் அனைவரும் அறிவாளிகளாக இருந்த காலம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியின் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கண்களில் ஹார்டின் பறக்கும் ஸ்மைலியை ரிப்ளை செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. முதல் படம் கொடுத்த உத்வேகத்தால், உதயநிதி அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. ஆனால், இவர் நடிப்பில் வெளிவந்த மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.

அரசியலில் முழுகவனம்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவியின் பொறுப்புணர்வை உணர்ந்துகொண்ட உதய் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துவிட்டு, கடைசியாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் நடித்துவிட்டு, தற்போது அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *