லால் சலாம் தந்த குஷி! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால் ?
நடிகர் விஸ்ணு விஷால் சமீபகாலமாக தொடர்ச்சியா பெரிய அளவில் பேசப்படும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையும் மக்களை கவரும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், இவருக்கு FIR , கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 9-ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து தற்போது வரை படம் சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது. படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு பிரமாண்ட வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட சுமாரான வரவேற்பு கிடைத்து இருக்கிறது.