டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா; தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகை மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பொங்கல் விழாவில், பங்கேற்ற பிரதமர் மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் நாளில் (ஜனவரி 15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் தைப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகை மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.
எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி, ‘தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.