களிமண் பற்றாக்குறை, வெயில் குறைவு, கூலி உயர்வால் மண்பாண்ட உற்பத்தி மந்தம்: தமிழக அரசு உதவுமா?

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

போதிய வெயில் இல்லாததால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பானை உற்பத்தியைச் செய்ய முடியவில்லை என்றும், களிமண் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தி, வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தைப்பொங்கல் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கரும்பு, புதுப்பானையில் பொங்கப்படும் பச்சரிசி பொங்கலும் தான். பொங்கல் பண்டிகையுடன் பொங்கல் பானையைப் பிரிக்க முடியாத நிலை தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது. இன்றைய நவீனக் காலத்தில் இயற்கையை நோக்கித் திரும்பி வரும் மக்கள் பழமையை அதிகமாகத் தேடிச் செல் கின்றனர். அந்த வகையில் இத்தனை ஆண்டு காலம் பித்தளைப் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பண்டிகையைக் கொண்டாடிய மக்கள் சமீப காலமாக மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மண் பானையை மக்கள் விரும்பினாலும் எதிர்பார்த்த அளவுக்குக் களிமண் கிடைக்காததால் மண்பாண்டத் தொழில் அதலப்பாதாளத்துக்குச் சென்றுவிட்டதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் குற்றஞ்சாட்டும் அதேநேரத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ” வேலூர் மாவட்டத்தில் கொசப்பேட்டை, சலவன்பேட்டை, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா, குடியாத்தம் போன்ற பகுதிகளில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடு வோர் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஆலங்காயம், வாணி யம்பாடி போன்ற பகுதிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, கலவை, வாலாஜா, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டத் தயாரிப் பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *