Lal Salaam Box office: தள்ளாடும் தலைவர்.. லால் சலாம் பாக்ஸ் ஆபீஸ்!

ஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், அன்றைய தினம் இந்தத்திரைப்படம் 3.55 கோடி ரூபாய் வசூல் செய்தது.

முதல் வார இறுதியில் சுமார் 10 கோடி வசூல் செய்தது.

கடந்த திங்கள் கிழமை 1 கோடி ரூபாய் வசூல் செய்த லால் சலாம் அடுத்தடுத்த நாட்களிலும் நாள் ஒன்றுக்கு கோடி ரூபாய் என்ற அளவிலேயே வசூல் செய்தது.

இந்த நிலையில் படம் வெளியான 6 ஆம் நாளான நேற்றைய தினம், லால் சலாம் திரைப்படம் 1.19 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஆக மொத்தமாக இந்தியாவில் மட்டும் லால் சலாம் திரைப்படம் 14.14 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

முன்னதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். லைகா நிறுவனம் படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசையமைத்து இருக்கிறார்.

ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான நட்பைச் சுற்றி வரும் இப்படம், மெத்தனமான கதையாக இருந்தாலும், படம் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் சில பகுதிகள், க்ளைமாக்ஸ் போன்றவற்றில் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூத்த மகள் ஐஸ்வர்யாவை மீட்டெடுத்த தொழில்!

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கும் நடிகர் தனுஷூக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. லிங்கா, யாத்ரா என இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன.

கிட்டதட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு பிரியபோவதாக தத்தமது சோசியல் மீடியா பக்கங்களில் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பலரும் பல விதமாக பேசினாலும், அதனை கண்டு கொள்ளாத தனுஷூம், ஐஸ்வர்யாவும் தங்களது தொழிலில் கவனம் செலுத்தினர். அந்த வகையில் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கும் வேலைகளில் மும்மரமானார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *