லால் சலாம் Vs. லவ்வர்: எந்த படத்தை முதலில் பார்ப்பது? ரசிகர்களின் கருத்து இதுதான்!
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படமும், வளர்ந்து வரும் ஹீரோ மணிகண்டனின் படமும் நேற்று (பிப்ரவரி 9) ஒரே நாளில் வெளியானது. ரசிகர்கள் பலர், நல்ல கதையாக இல்லா விட்டாலும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு செல்வது வழக்கம். அதனுடன் வெளியாகியிருக்கும் சிறிய பட்ஜெட் படங்கள் பெரிதாக தெரியாமலேயே போய் விடும். ஆனால், இப்போது மக்களின் ரசனைகள் மாறியுள்ளது.
லால் சலாம் விமர்சனம்:
திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். மதத்தையும் கிரிக்கெட்டையும் வைத்து இயக்கப்பட்டுள்ள கதை இது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு 40 நிமிடங்களுக்கு ஸ்கிரின் டைம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள், கேமியோ ரோலைத்தாண்டி, படத்தின் லீட் நடிகர் போலவே ரஜினி நடித்திருப்பதாக கூறுகின்றனர். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’. இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் இண்ட்ராேவிற்கு பிறகு சூடு பிடிப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். மதம் தொடர்பான கருத்துகள் ஆழ பதியும் வகையில் இருப்பதாகவும், படத்தின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளால் படம் நன்றாக மனதில் பதிய தவறுவதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துகளை கூறுகின்றனர்.