இந்தியாவில் சதம் அடித்த லம்போர்கினி! 2023ல் நடந்த சைலெண்டான சாதனை!
உலகின் மிகப் பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லாம்போர்கனி நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து செய்து விற்பனை செய்துள்ளன. தற்போது நிறுவனம் 2023-ம் ஆண்டில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது. லம்போர்கினியின் நிறுவனத்தின் கார்களை பார்ப்பதற்கே மக்கள் பாக்கியம் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற அளவில் இந்த நிறுவனம் சிறந்த கார்களை தயாரித்து அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த கார்கள் விற்பனையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் மொத்தம் 10 ஆயிரம் கார்களை தயாரித்து விற்பனை செய்து உள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு நடந்த விற்பனையை விட 10 சதவீதம் அதிகமாகும்.
இந்த 10,000 என்ற எண்ணிக்கை சர்வதேச அளவில் லம்போர்கினி நிறுவனம் செய்த விற்பனை எண்ணிக்கை யாவும் இதில் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் மொத்தம் 103 கார்களை விற்பனை செய்து உள்ளன. ஒட்டுமொத்தமாக உலகில் விற்பனையாகும் கார்களில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகும் காராக இருக்கிறது.
2023 நிறுவனம் 6,087 உரூஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் லாம்போர்கனி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக இந்த கார் தான் இருக்கிறது. இதை தொடர்ந்து ஹராக்கேன் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 3962 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் கால்களை வாங்கும் வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு சென்று பார்த்து இந்த கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சமூக காலமாக ஹை நெட் இன்கம் கொண்ட தனி நபர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர். அதனால் இந்நிறுவனத்திற்கு இந்தியா வளர்ந்து வரும் போது சிறந்த மார்கெட்டாக இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் சாலை கட்டமைப்பு வசதிகள் லம்போர்கினி காருக்கு தகுந்தாற்போல் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருவதால் பலர் லேம்போர்கினி காரை வாங்கி இந்திய சாலைகளில் ஓட்ட விரும்பி வருகின்றனர்.
லம்போர்கினி நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 60 ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் மனதை பிடித்த நிறுவனமாக இந்த நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு மிகப்பெரிய அறிவிப்பாக தனது புதிய பிளாக் ஷிப் சூப்பர் காராக ரிவால்டோ என்ற காரை அறிவித்தது. இது அவன்டேட்டர் காருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரிவோல்டோ கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு உள்ளது. தற்போது ரூபாய் 8.89 கோடி என்ற விலையில் இந்த நாள் விற்பனையாகி வருகிறது. இந்த விலை என்பது ஆப்ஷன்களுக்கு முன்பே விளையாகும் ஆப்ஷன்கள் கூட சேரும்போது விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எப்படியும் உருவாகும் ரூ 10 கோடி என்ற விலையில்தான் இந்த கார் இந்தியாவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் அம்சங்களை பொருத்தவரை இதில் 6.5 லிட்டர் நேச்சுரல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 803 பிஎச்பி பவரை 9250 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது அதே நேரம் 6,750 ஆர்பிஎம்-ல் 712 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஹைபிரிட் கார் என்பதால் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இவர்கள் சேர்த்து ஆயிரத்து ஒரு பிஎச் பவரை வெளிப்படுத்தும் திறன் உள்ளதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரை பொறுத்தவரை இதன் பெர்ஃபார்மன்ஸ் 0முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.5 நொடியில் பிக்கப் செய்தும் வகையிலும் 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7 நொடியில் பிக்கப் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 350 கிலோமீட்டர் வேகம் வரை சீறி பாயும் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 விதமான டிரைவ் மோடுகள் இந்த காரில் உள்ளன.