நிலம் அபகரிப்பு.. தலைமறைவான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிதத்தாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்க செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்.

இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா உளிட்டோர் மீது குற்றம்சாட்டிய ரோஸ்லின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,ஊராட்சி மன்றத் தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊராட்சி மன்றத் தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக உள்ளதால் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமுதாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *