மறைந்த நடிகை அங்காடி தெரு சிந்துவின் த.நா திரைப்படம் வெளியானது!
இந்தத் திரைப்படம் தற்போது அனகபுத்தூர் கணேஷ் திரையரங்கு, காசி தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை..
தமிழ் சீரியல்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளுள் ஒருவர், சிந்து. இவர், அங்காடி தெரு படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்தார். அது மட்டுமன்றி அவ்வப்போது சிறு சிறு காமெடி ரோல்களில் நடிப்பது அல்லது சிறு வேடங்களில் ஒரு சில சீன்களில் நடிப்பது என அவ்வப்போது திரையுலகில் தலைக்காட்டி வந்தார். குறிப்பாக வடிவேலுவுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஒருமுறை நேர்காணலில் பேசினார்.
அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாகவும் ஆரம்பத்தில் தனது மார்பகத்தில் சிறியதாக எழுந்த கட்டியை கவனிக்காமல் விட்டதாகவும் இதுவே தனது மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயிரிழந்தார்.
புதுப்படம் வெளியானது..