லாவா நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்.. வெளியான தகவல்கள் இதோ

விரைவில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்நாட்டு மொபைல் நிறுவனமான லாவா தயாராகி வருகிறது. Blaze Curve 5G என்ற லேட்டஸ்ட் மாடலை லாவா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாவா நிறுவனம் வரவிருக்கும் இந்த புதிய மொபைலின் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக பிரபல டிப்ஸ்டர் ஒருவர் இந்த மொபைலின் முக்கிய ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் விலை வரம்பு குறித்து ஆன்லைனில் தனது பரிந்துரையை வெளிப்படுத்தி உள்ளார். லாவா நிறுவனத்தின் வரவிருக்கும் Blaze Curve 5G மொபைலானது MediaTek Dimensity 7050 SoC ப்ராசஸரில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக Lava Blaze 2 5G மொபைலானது கடந்த நவம்பர் 2023-ல் MediaTek Dimensity 6020 SoC ப்ராசஸர் மற்றும் 50MP டூயல் ரியர் கேமரா யூனிட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே லாவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் போஸ்ட்டில் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனுக்கான டீஸர் ஒன்றை சமீபத்தில் ஷேர் செய்திருந்தது. ’Curve will lead the way’ என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டிருக்கும் அந்த டீஸர் இமேஜ் லாவா-வின் புதிய மொபைல் கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதை வெளிப்படுத்துகிறது. போஸ்ட்டில் ஷேர் செய்யப்பட்டுள்ள இமேஜ், தொலைபேசி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும், 5G நெட்ஒர்க்-ஐ சப்போர்ட் செய்யும் என்பதையும் குறிப்பிடுகிறது. இது வரவிருக்கும் மொபைலின் டிசைனிங் அல்லது வேறு எந்த அம்சங்களை பற்றியும் வெளிப்படுத்தாமல், Curve சொல்லை மட்டுமே நமக்கு தெரியப்படுத்துகிறது.

இதற்கிடையில் பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா (@stufflistings) லாவா டீஸ் செய்திருக்கும் மாடல் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி என குறிப்பிட்டுள்ளார். கூடவே வரவிருக்கும் இந்த மொபைலின் சில இமேஜ்களையும் ஷேர் செய்திருக்கிறார். அவர் ஷேர் செய்திருக்கும் இமேஜ்களில் Blaze Curve 5G மொபைலானது எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன், பளபளப்பான கடல் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மொபைலின் பேக்பேனலில் “5G” லேபிளுடன் “லாவா” பிராண்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் புதிய பிளேஸ் கர்வ் 5ஜி மொபைல் இந்தியாவில் மார்ச் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என்று டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் மற்றும் 64MP பிரைமரி சோனி சென்சாருடன் வரும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்தியாவில் விற்பனையில் உள்ள Lava Blaze 2 5G மொபைலின் 4GB + 64GB வேரியன்ட் ரூ.9,999 என்ற விலையில் கிடைக்கிறது. கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த மொபைலில் 18W சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரிபேக், 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 50MP டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *