“செயல் தலைவர்”.. உதயநிதி கைக்கு போன முக்கிய டாஸ்க்.. ஸ்டாலின் எடுத்த முடிவு? என்ன நடக்குது?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தற்போது ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்கிறார்.

முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாம் பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இந்த பணிகளை மேற்பார்வையிடுவது பெரும்பாலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முதல்வருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் நாட்களில் அதை பெரும்பாலும் கவனிப்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முக்கியமாக சென்னை, தென் மாவட்ட வெள்ளத்தில் இருந்து ஆட்சி நிர்வாகத்தில் பெரும்பாலும் பணிகளை கவனித்துக்கொள்வது உதயநிதி ஸ்டாலின்தான்.

துணை முதல்வர்: இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூட கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் பதவிக்கு முன்பாக அவருக்கு கட்சிப்பணியை முழுமையாக கவனிக்கும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் உயர் கல்வித்துறை பொறுப்பு செல்வதற்கு கூட உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும், கட்சி பணியை கவனிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாது என்பதாலும், அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை முழுமையாக நம்பமுடியாது என்பதாலும் தனது நண்பர் அன்பகம் கலையை அறிவாலயத்துக்குள் கொண்டுவந்தார் ஸ்டாலின்.

என்ன பணி?: 2021 ஜூலையில், திமுகவின் துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் கலை. தமிழ்நாடு முழுவதும் வருகிற கட்சி தொடர்பான புகார்களை கவனிக்கவும், அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் மீதான புகார்கள் இருப்பின் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கலைக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின்.

அதன்படி, கட்சி பஞ்சாயத்துகளை கவனித்து வந்தார் கலை. இந்தநிலையில், உதயநிதி அமைச்சரானதை அடுத்து, அரசு நிர்வாக ரீதியிலான முக்கிய விசயங்களை கவனிக்கும் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை என்ற முக்கியமான துறை உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கவனித்து வரும் பல முக்கிய பொறுப்புகளையும், கட்சி ரீதியிலான பிரச்சனைகளை கூடுதலாக கவனிக்கும் படியும் உதயநிதியிடம் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.

கட்சி பணிகள்: அதன்படி, ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் இரண்டையும் கவனித்து வந்தார் உதயநிதி. இதனால், உதயநிதி தங்கியிருக்கும் குறிஞ்சி இல்லத்தில் தினந்தோறும் அதிகாரிகளினுடனான ஆலோசனையும், கட்சி ரீதியிலான பஞ்சாயத்துகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தொடர்பான முழுமையான பணிகளையும் பிரச்சனைகளையும் கவனிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.

இதனால், குறிஞ்சி இல்லத்தில் கட்சி பிரச்சனைகளை கவனிப்பதைவிட தினமும் அறிவாலயம் வந்து கவனிக்கச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்கிறது அறிவாலய தரப்பு. அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கூடுதல் பொறுப்பு: தேசிய அரசியலில் பாஜக கட்சி மற்றும் பாஜகவின் டாப் தலைவர்கள் திமுகவை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில்தான் அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தற்போது ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்கிறார். முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாம் பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின்.இனி கட்சி பணிகளில் உதயநிதி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *