கூகுள் பே, போன்பே விட்டுத்தள்ளுங்க.. BHIM செயலியில் ரூ.750 கேஷ் பேக்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
இந்தியாவில் யுபிஐ வழி பணப் பரிமாற்றங்களை பொறுத்தவரை கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய வெளிநாட்டு நிறுவன செயலிகளின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது.
எனவே வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்திய தயாரிப்பான நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் NCPI-இன் யுபிஐ செயலியான பீம் பயனாளர்களுக்கு 750 ரூபாய் கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது.
பீம் செயலியில் ரூ.750 கேஷ் பேக்: பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பேடிஎம் வாடிக்கையாளர்கள் பலரும் மற்ற யுபிஐ செயல்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர் அந்த வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பீம் செயலி 750 ரூபாய் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.
தொடக்கத்தில் கூகுள் பே நிறுவனமும் இப்படி தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு கேஷ் பேக் சலுகைகளை அறிவித்தது.
ரூ.750 கேஷ் பேக்கை பெறுவது எப்படி?: அடிக்கடி உணவகங்களுக்கு செல்வோர் மற்றும் பயணங்களை மேற்கொள்வோருக்கு ரூ.150 கேஷ் பேக் சலுகைகளை பீம் செயலி மூலம் பெறலாம். அதாவது உணவகங்களில் நீங்கள் தொகையை செலுத்த பீம் செயலியை பயன்படுத்த வேண்டும்.
100 ரூபாய்க்கு மேல் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் 30 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். அதே போல ரயில்வே டிக்கெட் பதிவு, டாக்ஸியில் சென்றது பணம் செலுத்துவது ஆகியவற்றுக்கும் பீம் செயலியை பயன்படுத்தினால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 30 ரூபாய் என 150 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும்.
ரூ.600 கேஷ்பேக் பெறுவது எப்படி?: உங்கள் பீம் செயலியுடன் நீங்கள் பயன்படுத்தி வரும் ரூபே கிரெடிட் கார்டினை இணைக்கும் போது 600 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.
இவ்வாறு ரூபே கிரெடிட் கார்டினை இணைத்த பின்னர், நீங்கள் மேற்கொள்ளும் முதல் மூன்று பண பரிவர்த்தனைகள் அதாவது மெர்செண்ட் பேமெண்டுகளுக்கு 100 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். பின்னர் அடுத்த 10 பணப் பரிமாற்றங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் 200 ரூபாயை கடக்கும் பரிமாற்றங்களுக்கு 30 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். எனவே மொத்தமாக 600 ரூபாயை உங்களால் சேமிக்க முடியும்.
எரிபொருள் நிரப்பினால் 1% கேஷ்பேக்: பீம் செயலியில் எரிபொருள் நிரப்புவதற்கு பணம் செலுத்தினால் நீங்கள் செலுத்தும் தொகையில் 1 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றுக்கு இது பொருந்தும், அதாவது 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு அதற்கு பீம் செயலி மூலம் பணம் செலுத்தினால் 10 ரூபாய் கேஷ்பேக் உண்டு.
மின்சார கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்டவைகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நீங்கள் செலுத்தும் தொகை 100 ரூபாய் அல்லது அதை விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த சலுகைகளை மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.