ராமர் கோயிலை விடுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு இதுதானாம்? வரியில் புதிய மாற்றம்..?

யோத்தி ராமர் கோயில் ஒரு வழியாகப் பிரதமர் மோடி கைகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்திற்குத் திறக்கப்பட்ட உள்ளது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த மத்திய அரசும் அடுத்த முக்கியமான பணிக்கு செல்லகிறது. நெருங்கி வரும் பொதுத் தேர்தலுக்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரிவிதிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என ICRA கணித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாகத் தொடர்ந்து தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையாகும். நிர்மலா சீதாராமன் தவிர, ஐந்து முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய், பி சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் உள்ளனர். ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவது இடைக்காலப் பட்ஜெட்.
இந்த ஆண்டுப் பொதுத் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ள காரணத்தால், இது இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பொதுவாக இடைக்காலப் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என்று கூறப்பட்டாலும், பட்ஜெட் அறிக்கையில் சில முக்கியமான மாற்றங்களும், திருத்தங்களும், அறிவிப்புகளும் இருக்குமென ICRA கணித்துள்ளது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு தாக்கல் செய்யும். வரி விதிப்பு: ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததாலும், இந்திய சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளதாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு SST எனப்படும் பாதுகாப்புப் பரிவர்த்தனை வரியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சந்தைகளில் இருக்கிறது.
இந்த SST வரி குறைப்பது மூலம் அதிகப்படியான முதலீடுகள் உள்நாட்டுச் சந்தையில் வரும். பங்குச்சந்தை: பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக ஒரு முதலீட்டாளர் நிறுவனத்தின் முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்துகிறது மற்றும் அதே நேரத்தில் பங்குதாரர்களின் கைகளில் உள்ள ஈவுத்தொகைக்கு அரசாங்கம் வரி விதிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *