புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தை… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து பின்னர் தெளிவை அளிப்பவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. மிகவும் விரைவாகவும் வேகமாகவும் தேடிக் கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே சாத்தியம்.
அப்படிகல் இல்யுஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானதுதான்.