பொன்முடி, செந்தில் பாலாஜியை விடுங்க.. திமுகவிற்கு சைலண்ட்டாக போன ஷாக் நியூஸ்.. உடனே சுதாரிக்கணுமே
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்.. பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் திமுகவிற்கு வேறு ஒரு கெட்ட செய்தி கொங்கு மண்டலத்தில் இருந்து வந்துள்ளதாம்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போதும் சிறையில்தான் இருக்கிறார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்கவில்லை.
பொன்முடி:
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில்தான் தற்போது பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
அமைச்சரவை மாற்றம்: அதோடு 30 நாட்கள் அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
திமுகவிற்கு கெட்ட செய்தி; இப்படிப்பட்ட நேரத்தில் திமுகவிற்கு வேறு ஒரு கெட்ட செய்தி கொங்கு மண்டலத்தில் இருந்து வந்துள்ளதாம். அதன்படி செந்தில் பாலாஜி இல்லாத நிலையில், அவர் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் பல நிர்வாகிகள்.. கொஞ்சம் கொஞ்சமாக பாஜக, அதிமுக பக்கம் சொல்கிறார்களாம்.
வெளியேற பெரிய பெயர் தெரியாத.. ஆனால் உள்ளூர் அளவில் அதிக பவர் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ள நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி தாவ தொடங்கி உள்ளார்களாம். செந்தில் பாலாஜி இல்லை, லோக்சபா தேர்தலில் என்ன நடக்கும்.. திமுகவில் அமைச்சர்களை காப்பாற்றவே ஆள் இல்லை.. நாம் என்ன செய்ய முடியும் என்று கீழ் மட்ட நிர்வாகிகள் பலர் அதிமுக, பாஜகவிற்கு தாவ தொடங்கி உள்ளதாக திமுக உட்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.