விடியக்கலாம் 3 மணி வரை.. விராட் கோலி மன்னிப்பு கேட்டாரு.. 2015 சண்டை பற்றி டீன் எல்கர்

குறிப்பாக 35 வயதிலேயே 26,000+ ரன்களை குவித்து 80 சதங்களை அடித்துள்ள அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தரத்திற்கும் திறமைக்கும் பஞ்சமில்லாத விராட் கோலி களத்தில் எப்போதுமே எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படக் கூடியவர். குறிப்பாக எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அசராமல் அதற்கு தக்க பதிலடி கொடுத்து தெறிக்க விடக்கூடிய அவர் எப்போதுமே ஆக்ரோசமாக செயல்படுபவராக அறியப்படுகிறார்.

அதிகாலை 3 மணி வரை:
அதே சமயம் 2019 உலகக் கோப்பையில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்டீவ் ஸ்மித்தை கலாய்த்த இந்திய ரசிகர்களை அவ்வாறு செய்யாமல் கைதட்டி பாராட்டுங்கள் என்று சொன்ன தங்கமான குணத்தையும் விராட் கோலி கொண்டவர். இந்நிலையில் 2015 இந்திய சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தம்மிடம் மோதலில் ஈடுபட்டதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடைசியில் தவறை உணர்ந்து தம்மிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலியும் தாமும் சேர்ந்து ஒரு நாள் அதிகாலை 3 மணி வரை குடித்து பின்னர் நண்பர்களாக மாறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் நான் பேட்டிங் செய்ய வந்தேன். குறிப்பாக அஸ்வினுக்கு எதிராக நான் பேட்டிங் செய்ய தயாரானேன். அப்போது ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் என்னிடம் வம்பிழுக்க வந்தனர். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் டீ வில்லியர்ஸ் அவருடைய நண்பராக இருக்கிறார்”

“அதனால் நான் தென்னாப்பிரிக்க மொழியில் சொன்ன வார்த்தைகளை அவரால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனவே என்னிடம் மோதினால் உங்களை வீழ்த்துவேன் என்று சில கெட்ட வார்த்தைகளுடன் நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவரும் கெட்ட வார்த்தையில் திட்டினார். இருப்பினும் அப்போட்டி இந்தியாவில் நடந்ததால் நான் சற்று கவனத்துடன் இருந்தேன்”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *