எல்ஐசி அறிமுகம் செய்துள்ள குழந்தைகளுக்கான காப்பீடு திட்டம்! முழு விவரம்..
அந்த வகையில் குழந்தைகளுக்காக எல்ஐசி அம்ரித்பால் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். அம்ரித்பால் திட்டம்: குழந்தைகளின் மேற்படிப்பு செலவுகளுக்கு தேவையான பணத்தை சேர்த்து வைக்கும் வகையில் அம்ரித்பால் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் பிறந்து 30 நாட்கள் ஆன குழந்தைகள் தொடங்கி 13 வயது வரையிலான குழந்தைகள் வரை இணைய முடியும். அதே போல முதிர்வு காலமானது குழந்தைகள் 18 வயதை அடைந்ததில் இருந்து 25 வயதினை எட்டும் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பாலிசி காலம், சிங்கிள் ப்ரீமியத்துக்கு 5 ஆண்டுகளாகவும், லிமிடெட் ப்ரீமியத்துக்கு 10 ஆண்டுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்ச பாலிசி காலம் சிங்கிள் ப்ரீமியம் மற்றும் லிமிடெட் ப்ரீமியம் இரண்டிற்கு 25 ஆண்டுகளாகும். ப்ரீமியம் செலுத்தும் காலம் லிமிடெட் ப்ரீமியத்துக்கு 5, 6 மற்றும் 7 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே சிங்கள் ப்ரீமியத்துக்கு ஒரே முறை ப்ரீமியம் செலுத்தினாலே போதும். அம்ரித்பால் திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. குழந்தைக்கு 18 வயது நிரம்பிய உடன் இந்த பணத்தை திரும்ப எடுக்க முடியும். அதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் பலன்களும் கிடைக்கும்.