குழந்தைகளுக்கான LIC பாலிசி.. ‘அம்ரித்பால்’ பற்றிய விவரங்கள்!!
குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) அம்ரித் பால் என்ற பிரத்தியேகமான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அம்ரித் பால் இரண்டு விதமான பலன்களை அளிக்கிறது, ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடாக செயல்படுகிறது, அதே நேரத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள் வெவ்வேறு மைல்கல்கள் அடைவதற்கு உறுதி அளிக்கப்பட்ட ஒரு சேமிப்பாகவும் திகழ்கிறது.
LIC அம்ரித் பால் திட்டம்: பாலிசி குறித்த விவரங்கள் :
குழந்தைகளின் உயர் படிப்பு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த அம்ரித் பால் திட்டம்.
LIC அம்ரித் பால் திட்டம்: அம்சங்கள் மற்றும் தகுதி வரம்பு :
இந்த திட்டம் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மோடுகளில் விண்ணப்பிப்பதற்கு கிடைக்கிறது. 30 நாட்கள் முடிவடைந்த பிறந்த குழந்தை கூட இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தகுதி பெறுகிறது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 13. இந்த பாலிசியின் ஒரு பகுதியாக, குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட தொகை 2 லட்ச ரூபாய் மற்றும் அதிகபட்ச உறுதியளிக்கப்பட்ட தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
அம்ரித் பால் திட்டத்தின் பலன்கள் :
அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 80 ரூபாய் என்ற உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. இது பாலிசி காலம் முழுவதும் ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியிலும் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மெச்சூரிட்டி வயது 18 மற்றும் 25 வருடங்கள். அதே நேரத்தில் லிமிடெட் பிரீமியம் பேமெண்டிற்கான குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டுகளாகவும், சிங்கிள் பிரீமியம் பேமெண்ட்க்கு 5 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செட்டில்மெண்ட் ஆப்ஷன்கள் :
லிமிடெட் மற்றும் சிங்கிள் பிரீமியம் பேமெண்ட் ஆகிய இரண்டிற்குமான அதிகபட்ச பாலிசி காலம் 25 வருடங்கள் மேலும் பாலிசி POSP-LI (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் பர்சன் – லைஃப் இன்சூரன்ஸ்) /CPSC-SPV (காமன் பப்ளிக் சர்வீஸ் சென்டர் – ஸ்டேட் பப்ளிக் வெஹிகிள்), மூலமாக பெறப்பட்டால் அதிகபட்ச பாலிசி காலம் 20 வருடங்கள்.
பாலிசி மெச்சூரிட்டியாகும் தேதியில் காப்பீட்டுத் தொகையானது உறுதி அளிக்கப்பட்ட கூடுதல் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இந்தத் தொகையை நீங்கள் 5, 10 அல்லது 15 வருடங்கள் இன்ஸ்டால்மெண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
இறப்பு கால பலன் :
பாலிசி காலத்தில் ஒருவேளை பாலிசிதாரர் இறந்துவிடும் பட்சத்தில் ஒவ்வொரு சிங்கிள் பிரீமியம் மற்றும் லிமிடெட் பிரீமியம் பேமெண்டின் கீழ் இறப்புக்கான உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை இரண்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.
இறப்பின் பெயரில் வழங்கப்படும் காப்பீட்டு தொகை உறுதியளிக்கப்பட்ட கூடுதல் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.
LIC இன் அம்ரித் பால் திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு ஆர்வமுள்ள நபர்கள் LIC நிறுவனத்தின் licindia.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடலாம்.