LIC-இன் புதிய இன்டெக்ஸ் பிளஸ் பாலிசி.. எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை நிறுவனமான எல்ஐசி புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பெயர் எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ்( LIC Index Plus). இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள், நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

LIC Index Plus: எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் திட்டம் இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட, பங்கேற்காத, தனி நபர் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இது ஒரு ULIP திட்டம் என்பதால் ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து உங்கள் ப்ரீமியம் யூனிட்களாகும் சேமிக்கப்பட்டு பாலிசி காலம் முழுவதும் லாபத்தை தரும்.

எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் சிறப்பம்சங்கள்: எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் என்பது மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் சேமிப்பு விருப்பத்தை அளிக்கும் ஒரு ப்ரீமியம் திட்டமாகும்.

பாலிசிதாரரின் வயது 51க்கு மேல் இருந்தால் பாலிசி கவரேஜ் 7 மடங்காகவும், 51க்கு கீழ் இருந்தால் பாலிசி கவரேஜ் 7 மற்றும் 10 மடங்காகவும் இருக்கும்

இரண்டு நிதிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்

1) ஃப்ளெக்ஸி குரோத் ஃபண்ட் (Flexi Growth Fund )

2) ஃப்ளெக்ஸி ஸ்மார்ட் குரோத் ஃபண்ட் (Flexi Smart Growth Fund)

5 ஆண்டுகள் லாக் இன் காலம் முடிந்த பின் பகுதியளவு பணத்தை எடுக்கலாம்.

முதலீட்டுடன் கூடிய ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் இது

கூடுதல் உத்தரவாத பலன்கள் குறிப்பிட்ட நிதிகளில் யூனிட்களாக சேர்க்கப்படும்

5 ஆண்டுகள் லாக் இன் காலம் முடிந்த பின் சரண்டர் செய்து கொள்ளலாம்

இதில் கூடுதல் விபத்து காப்பீட்டையும் சேர்க்க முடியும்

என்னென்ன தகுதிகள்?

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 90 நாட்கள் , அதிகபட்ச வயது 60

முதிர்வு தொகை பெறும் வயது: குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்ச வயது 75 – 85 வயது

பாலிசி காலம் : 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை (வருடாந்திர ப்ரீமியத்தை பொறுத்தது)

குறைந்தபட்ச ப்ரீமியம்: ஆண்டுக்கு ரூ.30,000, அரையாண்டுக்கு – ரூ.15,000, காலாண்டுக்கு- ரூ.7,500, மாதம் – ரூ.2,500

அதிகபட்ச ப்ரீமியம் : எந்த வித கட்டுப்பாடும் இல்லை

உங்களது ப்ரீமியமானது NSE NIFTY 100 index அல்லது NSE NIFTY50 index ஆகியவற்றில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நல்ல லாபம் கிடைக்கும் என எல்ஐசி கூறுகிறது.

உதாரணம்: மணி என்பவருக்கு 34 வயதாகிறது. அவர் இந்த ஆண்டு (2024) இந்த திட்டத்தை எடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஓராண்டுக்கு ப்ரீமியமாக அவர் ரூ.1 லட்சம் செலுத்துகிறார். பாலிசி காலம் 21 ஆண்டுகள், 2024இல் இந்த பாலிசியை வாங்கினால், 2045இல் இது முதிர்வடையும். அப்போது அவரது வயது 55ஆக இருக்கும் , அப்போது அவருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை ரூ.61,85,851. அதாவது அவர் முதலீடு செய்தது ரூ.21 லட்சம், அது வளர்ந்து ரூ.61.85 லட்சமாக கைக்கு கிடைக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *