சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் – சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வலதுசாரி கொள்கைவாதியான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் ரந்தீப் ஹூடா ‘சாவர்க்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வருகிற மார்ச 22-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.
ஹைவே, சர்ப்ஜித், சுல்தான் ஆகிய படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரந்தீப் ஹூடா, இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநர் அவதரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இரு நாயகர்கள்; அவர்களில் ஒருவர் கொண்டாடப்பட்டார், மற்றொருவர் வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டார்.
2024-ஆம் ஆண்டு தியாகிகள் தினத்தன்று, வரலாறு திருப்பி எழுதப்படும். மார்ச் 22-ஆம் தேதியன்று சுவதந்த்ரிய வீர் சாவர்க்க்கர் திரையரங்குகளில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.