என் மகளை திருமணம் செய்பவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்… தந்தையின் வீடியோ வைரல்

குடும்ப அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தில் திருமணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளின் திருமணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் திருமணத்திற்கான சேமிப்பை தொடங்கிவிடுகின்றனர்.

முன்பெல்லாம் உறவு முறையில் மட்டுமே திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த சூழ்நிலை மாறி இணையதளங்கள் மூலம் வரன் பார்க்க தொடங்கிவிட்டனர். அதன்படி, இந்த இணையதளங்கள் மூலம் தங்களுக்கு பிடித்த வரனை தேர்வு செய்துக்கொள்கின்றனர்.

மக்களிடையே சமூக ஊடக பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதன் மூலம் திருமணத்திற்கு வரன் தேட தொடங்கிவிட்டனர். இதற்காக பிரத்யேக குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இப்படி வரன் பார்ப்பது பல விதமாக உள்ள நிலையில் சமீபத்தில் ஒரு தந்தை தனது மகளுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் வரன் தேடியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றில் தந்தை மற்றும் மகள் உள்ளனர். அதில் தனது மகளுக்கு ஒரு வாரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், அவ்வாறு தனது மகளை திருமணம் செய்துக்கொள்பவருக்கு blank cheque வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதில் மாப்பிள்ளை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம், பணத்திற்கு பஞ்சமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாகவே இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் பல போலியானவை. அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் இவ்வாறு செய்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *