சொகுசு காரோ தோத்துடும் போல! டாடா பஞ்ச் இவி காரில் உள்ள அம்சங்கள் இவை தான்!
தற்போது இந்தியா முழுவதும் டாடா பஞ்ச் இவி காருக்கான புக்கிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அந்த காரின் முக்கியமான அம்சங்கள் குறித்த விபரங்கள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி இந்த காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் என்னென்ன வேரியன்ட்களில் இருக்கும் என்ற விரிவான விபரத்தை தான் நாம் இங்கே காண போகிறோம்.
டாடா நிறுவனம் தனது மைக்ரோ எஸ்யூவி காரான பஞ்ச் என்ற காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் தயாரித்து வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கார் தான் டாடா நிறுவனத்தின் 4வது எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. கார்களில் 2வது எலெக்ட்ரிக் காராக இருக்கிறது நெக்ஸானிற்கு பிறகான எலெக்ட்ரிக் கார் இதுதான். இதுபோக டாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களில் எலெக்ட்ரிக் வெர்ஷன் தற்போது விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இந்த பஞ்ச்.இவி காரின்விலை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த காருக்கான புக்கிங் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ரூ21,000 முன்பணத்தில் இந்த காரைக் காண புக்கிங்கை டாடா நிறுவனம் செய்து வருகிறது. டாடா நிறுவனம் இந்த பஞ்ச் காரை ஜென் இவி2 பிளாட்பார்மான ஆக்டி.இவி (acti.ev) என்ற பிளாட்பார்மில் தான் உருவாக்குகிறது. இந்த பஞ்ச் கார் வேரியன்டை பொறுத்து 300-400கிமீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஞ்சு இவி காரின் மோட்டார் திறன் எவ்வளவு? அது எவ்வளவு பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் என்ற விவரங்களை எல்லாம் இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. முக்கியமாக இந்த கார் அதிக ரேஞ்ச் தர வேண்டும் என்பதற்காக மல்டிமோட் பிரேக் ஜெனரேஷன் சிஸ்டத்தை இந்நிறுவனம் உட்பகுதியுள்ளதாக நமக்கு தெரியவந்துள்ளது. இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகின்றன.
அதன்படி ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வெஞ்சர், எம்பவர் பிளஸ் ஆகியன ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியன்ட்களாக விற்பனைக்கு வருகின்றன. இதுபோக நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் வேரியன்டுகளாக அட்வெஞ்சர் என்பவர் மற்றும் எம்பவர்டு பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் மட்டும் அதிக பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பஞ்ச் இவி காரில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கலர் ஆப்ஷன்கள் இருக்கும் எனவும் டூயல் டோன் ஆப்ஷன்கள் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் டாடா நிறுவனம் இந்த கார் குறித்த சில முக்கியமான அம்சங்களை மட்டும் வெளியிட்டுள்ளன. அதன்படி டாடா பஞ்ச் இவி காரின் ஸ்மார்ட் வேரியன்டில் எல்இடி ஹெட்லைட், ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல், மல்டி மோடு ரீஜன் இஎஸ்பி மற்றும் 6 ஏர் பேக்குகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் பிளஸ் வேரியன்ட் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை அட்வெஞ்சர் வேரியன்டை பொறுத்தவரை ஸ்டாண்டர்ட் மற்றும் லாங்ரேஞ்ஜ் உள்ளன. இதில் ஸ்மார்ட் வேரியண்டில் உள்ள அனைத்து ஆப்ஷன்கள் உட்பட கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க ஃபாக் லேம்ப், 17.78சென்டிமீட்டர் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, லாங்ரேஞ்ச்களில் மட்டும் இபிபி ஆட்டோ ஹோல்டு, ஜூவல்டு கண்ட்ரோல்நாப் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதுபோக சன்ரூஃப் ஆப்ஷனும் இடம் பெறும்.
அடுத்ததாக எம்பவர்டு வேரியன்டை பொறுத்தவரை அட்வெஞ்சர் வேரியன்டில் உள்ள அனைத்து ஆப்ஷன்கள் உட்பட சற்று கூடுதலான ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி ஆர்16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஏர் பியூரிஃபையர், ஆட்டோ போல்டு ஒஆர்விஎம், 17.78 சென்டிமீட்டர் டிஜிட்டல் காக்பிக், எஸ்ஓஎஸ் அம்சம், 26.03 சென்டிமீட்டர் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே, சன்ரூஃப் மற்றும் டூயல் டோன் பாடி கலர் ஆகிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பவர்டு பிளஸ் வேரியண்ட பொறுத்த வரை எம்பவர்டு வேரியன்டில் உள்ள அனைத்து ஆப்ஷன்கள் உட்பட கூடுதலாக சில ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி லெதர் சீட்டுகள், 360 டிகிரி கேமரா, சரவுண்ட் வியூ சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், ஆர்கேட் இவி ஆப் சூட், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், 26.03 சென்டிமீட்டர் டிஜிட்டல் காக்பிட் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.