அம்பானியை போல ஆரம்ப நிலை பணக்காரர்களும் சொகுசா டிராவல் பண்ணலாம்.. சொகுசு கப்பலுக்கு டஃப் கொடுக்கும் கார்!
இந்தியர்களின் மனதில் கூடுதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover India Limited) நிறுவனம், அதன் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் (Discovery Sport) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 70 லட்சத்திற்கும் குறைவான விலையை அந்நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய சொகுசு கார் விரும்பிகளின் மனம் கவர்ந்த கார் உற்பத்தி நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover India Limited) இருக்கின்றது. குறிப்பாக, செல்வந்தர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரின் மனம் கவர்ந்த கார் உற்பத்தி நிறுவனமாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய கார் உற்பத்தி நிறுவனமே இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாக கவரும் பொருட்டு தற்போது அதன் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் (Discovery Sport) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்து இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 67.90 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஓர் மிட் சைஸ் சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். புதுப்பிக்கப்பட்ட நிலையிலேயே இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலேயே இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது .இரண்டு விதமான மோட்டார் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் ஆகியவையே அவை ஆகும். இதில் பெட்ரோல் மோட்டார் 183 kW பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.
டீசல் மோட்டாரானது 150 kW மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும். இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த காரில் ஏகப்பட்ட புதிய வசதிகளும் மற்றும் அம்சங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதந்தவகையில், நிப் மற்றும் டக் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கிரில், லோவர் பாடி சில்கள் மற்றும் லோவர் பம்பர் ஆகியவற்றில் இதைக் காண முடிகின்றது. மினுமினுக்கும் கிளாஸ் பிளாக் நிறத்தில் அது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதே கிளாஸ் பிளாக் நிறத்தைக் கொண்டே நிறுவனம் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் வீல் ஆர்ச்சுகள் மூன்று லைன்கள் கொண்ட காற்றை உள் வாங்கும் துளைகள் ஆகியவற்றில் லேண்ட் ரோவர் சேர்த்து இருக்கின்றது.
இவற்றுடன் புதிதாக 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், வேரிசைன் ப்ளூ நிறத்தையும் லேண்ட் ரோவர் இந்த காரில் சேர்த்து இருக்கின்றது. இந்த காரின் உட்பக்கத்தில் புதிய மாற்றமாக 11.4 அங்குல வளைவான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் சென்டர் கன்சோலும் மறு வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முக்கிய கன்ட்ரோல்களின் ஷார்ட் வெளிப்பக்கத்திலேயே இடம் பெற்றிருக்கும். இத்துடன், 2024 டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட், 12 வோல்ட் வசதிக் கொண்ட யுஎஸ்பி டைப் சி சார்ஜர், மூன்றாம் வரிசை இருக்கையாளர்களும் பயனடையும் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பிஎம்2.5 ஏர் ஃபில்டர், பனோரமிக் சன்ரூஃப், 3டி சரவுண்ட் கேமிரா உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.