ஒரு சகோதரி கூட இல்லையே என ஏங்கிய இளம்பெண்: 15 சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் இளம்பெண் ஒருவர், தனக்கு ஒரு சகோதரி கூட இல்லையே என கவலைப்பட்ட நிலையில், தற்போது தனக்கு 15 சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரணு தானம் தொடர்பான ஆவணங்கள்
வேல்ஸ் நாட்டின் தலைநகரான Cardiffஇல் வாழ்ந்துவரும் சாராவுக்கு 22 வயதாகும்போது, தங்கள் வீட்டில் உயிரணு தானம் தொடர்பான ஆவணங்கள் இருப்பதைக் கண்டு அது குறித்து தனது தந்தையான ஹாவர்டிடம் கேட்டுள்ளார்.
அவரது தந்தையோ, அது குறித்து கேட்டவுடன் கோபப்பட்டுள்ளார். சமீபத்தில் தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் சாரா இந்த விடயத்தை பகிர்ந்துகொள்ள, அவரோ ஒருவேளை அவர் உனது சொந்த தந்தை இல்லையோ என்னவோ என்று கூற, சாரா சிரித்துக்கொண்டே, இருங்கள் என் அம்மாவிடமே கேட்டுவிடுகிறேன் என்று வேடிக்கையாக சொல்லிவிட்டு, சிங்கப்பூரில் இருக்கும் தன் தாயான ஷைராவிடம் கேட்க, ஏன் இப்படி ஒரு கேள்வியை இப்போது என்னிடம் கேட்கிறாய் என்று சீரியஸாக கேட்டிருக்கிறார்.
தெரியவந்த உண்மை
அப்போதுதான் சாராவுக்கு பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஆம், சாராவின் தந்தை புற்றுநோய் காரணமாக, உடல் ரீதியாக தந்தையாகும் திறனை இழந்துவிட்டிருக்கிறார்.
ஆகவே, பிரித்தானிய மருத்துவர் ஒருவர் உயிரணு தானம் செய்ய, அதன் மூலம்தான் சாராவின் தாய் கருவுற்றிருக்கிறார். மேலும், இந்த உண்மை சாராவைத் தவிர மற்ற உறவினர்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும், ஒருவர் கூட அவரிடம் உண்மையைக் கூறவில்லை.
முதல் காரணம், சாரா உயிரணு தானம் மூலம் பிறந்தவர் என்பதை யாரும் அவருக்கு தெரிவிக்கக்கூடாது என அவரது தந்தை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு, சாரா பிறந்ததும் அவரை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் அவரைப் பிடித்துப்போயிருக்கிறது.
தந்தையைத் தேடி…
தனது தந்தையைத் தேடும் முயற்சியில் சாரா இறங்க, அவருக்கு தொடர்ச்சியாக ஏமாற்றங்களே கிடைத்துள்ளன. முதலில், சாரா 2005க்குப் பின் பிறந்தவர் என்பதால், சட்டப்படி அவரால் தன் பிறப்புக்குக் காரணமான உயிரணுவை தானம் செய்தவர் யார் என்பதை அறிந்துகொள்ள அனுமதியில்லை.