இப்படி வேர்கடலை சுண்டல் செய்யுங்க: இந்த சுவையை அடிச்சுக்கவே முடியாது
ஒரு முறை இப்படி பொடி செய்து, அதை பயன்படுத்தி சுண்டல் செய்யுங்க.
தேவையான பொருட்கள்
அவித்த வேர்கடலை 1 கப்
அரை கப் தேங்காய் துருவியது
1.5 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1.5 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
வத்தல் 2
1 கொத்து கருவேப்பிலை
2 ஸ்பூன் எண்ணெய்
½ ஸ்பூன் கடுகு
கருவேப்பிலை சிறிய அளவு
செய்முறை : வேர்கடலையை கழுவி அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வத்தல் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நிறம் மாறியதும் இதை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு, கருவேப்பிலை சேர்த்து அவித்த கடலையை சேர்க்கவும். தொடர்ந்து இதற்கு மேலாக பொடியை தூவ வேண்டும். தொடர்ந்து தேங்காய் துருவலை சேர்க்கவும். செம்ம சுவையான வேட்கடலை சுண்டல் ரெடி.