ராஜஸ்தானில் 22-ம் தேதி மதுபான கடைகள் மூடல்..!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 11 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜஸ்தானில் வரும் 22-ம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்டிலும் மதுபான கடைகளை மூட அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.