அழகான டூயல் டோன் நிற கார்களின் லிஸ்ட்! இந்த ஐந்துல ஒன்னை நீங்க தாராளமா பிக் பண்ணிக்கலாம்!
இந்தியர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு அடுத்தபடியாக நிறங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே இன்றைய கால கார் மாடல்களில் அதிக அளவில் டூயல் டோன் நிற தேர்வை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒற்றை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் கார்களைக் காட்டிலும் டூயல் டோன் நிறத்தைக் கொண்டிருக்கும் கார் அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கும்.
இதற்கு சான்றாக உள்ள டாப் ஐந்து கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, டூயல் டோன் நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து கவர்ச்சியான கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta SUV): இந்தியர்களின் பிரியமான எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடலாகவும் இது இருக்கின்றது. இதனால்தான் இந்த கார் மாடலில் ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், டூயல் டோன் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. அட்லஸ் வெள்ளை நிறம் – அபிஸ் கருப்பு நிற ரூஃப் நிறத்தில் கிடைக்கும் ஹூண்டாய் கிரெட்டாவே மிக சிறந்த டூயல் டோன் தேர்வாக காட்சியளிக்கின்றது. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரூ. 10.99 லட்சம் தொடங்கி ரூ. 20.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டாடா டியாகோ (Tata Tiago): டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக டியாகோ காட்சியளிக்கின்றது. இதனை பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடனேயே கார் காதலர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு டியாகோவில் டூயல் டோன் நிற ஆப்ஷனை வழங்குகின்றது.
அந்தவகையில், டியாகோவில் வழங்கப்படும் மிக சிறந்த டூயல் டோன் நிற தேர்வாக டொர்நடோ ப்ளூ – பிளாக் ரூஃப் ஆப்ஷன் இருக்கின்றது. டியாகோ இந்தியாவில் ரூ.5.59லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டியாகோ ஓர் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் அது பெற்றிருக்கின்றது.
ஹோண்டா எலிவேட் (Honda Elevate): ஹோண்டா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எலிவேட் மாறியுள்ளது. நிறுவனம் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்த எஸ்யூவி ரக கார் என்பதால் இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பலதரப்பட்ட சிறப்பம்சங்களை எலிவேட்டில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில் டூயல் டோன் நிற ஆப்ஷனையும் இந்த கார் மாடலில் ஹோணஅடாவழஹ்கிக் கொண்டிருக்கின்றது. கிரிஸ்டல் பிளாக் ரூஃப் – ஆரஞ்சு பியர்ல், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் – கிரிஸ்டல் பிளாக் பியர்ல் மற்றும் பிளாட்டினம் ஒயிட் பியர்ல் – கிரிஸ்டர் பிளாக் பியர்ல் ரூஃப் ஆகிய மூன்று விதமான டூயல் டோன் ஆப்ஷனையே ஹோண்டா எலிவேட்டில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 11.57 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்திய இளைஞர்களின் பிரியமான கார் மாடலாக ஐ20 காட்சியளிக்கின்றது. பார்க்க குட்டியாக இருக்கும் இந்த ஹேட்ச்பேக் காரில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதேபோல் டூயல் டோன் வண்ண ஆப்ஷனையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
தண்டர் ப்ளூ – அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட் – அபிஸ் பிளாக் ரூஃப் ஆகியவை அந்த நிற தேர்வுகள் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 9.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): ஆஃப் ரோடு பயண பிரியர்களின் புதிய காதலாக ஜிம்னி மாறி இருக்கின்றது. இந்த காருக்கு ஆஃப்-ரோடு வாகன பிரியர்கள் மத்தியில் மட்டுமின்றி ஃபேமிலி கார் பிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வாரி வழங்கி இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது. டூயல் டோன் நிற தேர்வு அதுவாகும். கைனடிக் யெல்லோ- ப்ளூவிஸ் பிளாக் ரூஃப் மற்றும் சைஸ்லிங் ரெட் – ப்ளூவில் பிளாக் ரூஃப் ஆகியவையே அவை ஆகும்.