கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சுழற் பந்து வீச்சாளர்கள் தங்களுடைய முழு பலத்தை இங்கிலாந்துக்கு எதிராக வெளிகாட்ட வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
இவர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 242 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வினை தவிர வேறு யாரும் 200 விக்கெட்டை தொடவே இல்லை. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. இவர் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் 167 விக்கெட்டுகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் உமேஷ் யாதவ். இவர் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 83 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் முகமது சமி. சமி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 65 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் இருக்கிறார். இவர் 42 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இஷாந்த் சர்மா இருக்கிறார். அவரும் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் அக்சர் பட்டேலை விட அதிக இன்னிங்ஸ் அவர் இந்தியாவில் விளையாடி இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் புவனேஸ்வர் குமார். இவர் 18 விக்கெட்டுகளை இந்தியாவில் வீழ்த்திருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் குல்தீப் யாதவ். இவர் 16 விக்கெட்டுகளை இந்திய மண்ணில் வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜெயந்த் யாதவ். இவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருப்பவர் பும்ரா. இவர் 14 விக்கெட்டுகளை இந்தியாவில் வீழ்த்திருக்கிறார். இந்த பட்டியலில் கடைசி இடத்தில் அமித் மிஷ்ரா இருக்கிறார். இவர் 12 விக்கெட்டுகளை இந்தியாவில் வீழ்த்தி இருக்கிறார்.