உலகின் மிக ஆபத்தான நகரங்களின் பட்டியல்… ஒரே நாட்டில் தெரிவான 6 நகரங்கள்

சுமார் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 110 கொலைகள் நடக்கும் உலகின் மிக ஆபத்தான நகரம் எதுவென்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

மிக ஆபத்தான நகரங்களின் ஒன்றாக
கடந்த 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் மெக்சிகோவில் உள்ள செலையா நகரம் மிக ஆபத்தான நகரங்களின் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு 100,000 குடியிருப்பாளர்களுக்கு சராசரியாக 110 கொலைகள் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உலகின் மிக ஆபத்தான 10 நகரங்களில் 6 எண்ணிக்கையும் மெக்சிகோவில் அமைந்துள்ளது. செலையா மட்டுமின்றி, Tijuana, Ciudad Juarez, Ciudad Obregon, Irapuato மற்றும் Ensenada ஆகிய நகரங்களும் உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மெக்சிகோவுக்கு வெளியே, அமெரிக்காவின் St Louis நகரம், பிரேசிலின் Feira de Santana, தென்னாப்பிரிக்காவின் Cape Town ஆகியவை தொடர்புடைய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நகரங்களில் பெரும்பாலானவை லத்தீன் அமெரிக்காவில் உள்ளன, அங்கு வன்முறை பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களால் ஏற்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
கடந்த 2020ல் மட்டும் மெக்சிகோ நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் என பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை என்பது 28,000 என்றே தெரியவந்துள்ளது. உலகில் மிக அதிகமாக கொலைகள் நடக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் St Louis நகரம் உள்ளது.

இந்த நகரமானது அதிக வறுமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு பெயர் பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் மெக்சிகோவின் Celaya-வில் கைவிடப்பட்ட காரில் ஐந்து மருத்துவ மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும் கொடூர சித்திரவதைக்கு பின்னர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தனர்.

இதேப்போன்று 2022 மே மாதம் Celaya நகரில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் முகமூடி அணிந்த 15 துப்பாக்கிதாரிகளால் 11 பேர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிதாரிகள் Santa Rosa de Lima என்ற போதை மருந்து கடத்தல் குழுவை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *