“சின்ன வயசுனா கிளிண்டனுக்கு ரொம்ப பிடிக்கும்!” சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் வெளியான ரகசிய ரிப்போர்ட்

மைனர் சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கு தொடர்பான விசாரணையில், முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் குறித்து இடம்பெற்ற தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அலறவிட்ட வழக்கு என்றால் அது ஜெஃப்ரி எப்ஸ்டீன். இதில் முன்னாள் அதிபர்கள், பிரபலங்கள் பெயரும் அடிப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், இப்போது பிரபலங்களின் பெயர்கள் பிரைவசி காரணமாக வெளியிடப்படவில்லை. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது பகீர் தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க கோடீஸ்வரர்: அமெரிக்காவில் இருந்த மிகப் பெரும் கோடீஸ்வர்களில் ஒருவர் தான்ஜெஃப்ரி எப்ஸ்டீன்.. 1953இல் நியூயார்க் நகரில் பிறந்த இவர், வளரும் போதே பல சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இவரது நட்பு வட்டாரத்தில் எப்போதும் முக்கிய அரசியல்வாதிகள், டாப் நட்சத்திரங்கள் எனப் பிரபலங்கள் தான் இருந்தனர். பிரபலமான நபராக இருந்த இவர், அங்கே இளம் பெண்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டதாகப் புகார் எழுந்தது.

முதலில் இவர் கடந்த 2005இல் இந்த புகாரில் கைதாகி இருந்தார். 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உறவு கொண்டு அந்த சிறுமிக்குப் பணம் கொடுத்த புகாரில் கைதானார். கடந்த 2008இல் இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போதே பல மைனர் சிறுமிகள், இளம்பெண்கள் இவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தனர். இருப்பினும், 13 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்துவிட்டு இவர் ரிலீஸ் ஆனார். இது சர்ச்சையானது.

ரகசிய ஆவணங்கள்: அதேநேரம் இந்த நேரத்தில் தான் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், டிரம்ப் ஆகியோர் இவரிடம் இருந்து விலகினர். இருப்பினும், மற்ற பிரபலங்கள் இவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். ஒன்றாகவே பார்ட்டி செய்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2019இல் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் மீண்டும் கைதானார். அப்போது போலீசார் விசாரணையில் அவரது வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

இந்த நேரத்தில் கைதான ஒரே மாதத்தில் அவர் சிறையிலேயே உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவருடனேயே அவரது குற்றங்களும் புதைந்து போனது. தவறு செய்த மற்றவர்களுக்கு உரியத் தண்டனை கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டினர். அவரது வழக்கு நடந்த போதும் அதில் தொடர்புடைய பல பிரபலங்களின் பெயர்கள் பிரைவசி காரணமாக “ஜேன் டோஸ்” அல்லது “ஜான் டோஸ்” என்று விசாரணை ஆவணங்களில் இருந்தது.

பில் கிளிண்டன்: இதற்கிடையே எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ரகசிய நீதிமன்ற ஆவணங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்படி 40 ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைகேல் ஜாக்சன், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் மற்றொரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒருமுறை பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரிடம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் சின்ன வயதில் இருப்பவர்களையே விரும்புவார் என கூறியதாக ஒரு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஹன்னா ஸ்ஜோபெர்க் என்ற பெண் தான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். தன் கிளின்டனை சந்திக்கவே இல்லை என்ற போதிலும், இதை எப்ஸ்டீன் தன்னிடம் கூறியதாக அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

கிளிண்டனுக்கு சின்ன வயதில் இருந்தால் பிடிக்கும் என கத எப்ஸ்டீன் கூறினார் என்றும் இளம் பெண்கள் அல்லது சிறுமிகள் என்பதையே அவர் சொல்ல வந்ததாகவும் ஸ்ஜோபெர்க் தெரிவித்துள்ளார். அதேநேரம் வழக்கு விசாரணையில் கிளிண்டனிற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் இருப்பதாக போலீசார் எதுவும் கூறவில்லை. இப்போது வரை 40 ஆவணங்கள் மட்டும் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது குறித்து மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *