குட்டி கோலி வந்துட்டாரு.. இளவரசன் கிடைச்சாச்சி! விராட் கோலிக்கு ஆண் குழந்தை.. பெயர் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அப்போது விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தன்னுடைய மனைவியின் முதல் பிரசவத்திற்காக பாதியில் தொடரிலிருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடருக்காக பயிற்சி செய்ய ஐதராபாத்துக்கு வந்திருந்த விராட் கோலி திடீரென்று தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறி வெளிநாடு சென்று விட்டார். இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
டிவில்லியர்ஸ் கூட பிரசவத்திற்காக விராட் கோலி சென்று இருக்கிறார் என முதலில் கூறியிருந்தார். அதன் பிறகு, தான் தவறான கருத்தை கூறிவிட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்டார். இதனால் விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் கடந்த 15 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனை ரசிகர்களிடம் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்க ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஆண் குழந்தைக்கு அக்காய் என்ற பெயரை சூட்டி இருப்பதாகவும் வாமிகாவின் தம்பியை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். இந்தத் தருணத்தில் உங்களுடைய ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள விராட் கோலி இந்த சமயத்தில் கொஞ்சம் தனிமை தேவைப்படுவதால் அதனை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் குட்டி கோலி வந்துவிட்டதாக பலரும் டிரண்ட் செய்து வருகின்றனர்.