Live : தனுஷ்கோடி அரிச்சல் முனை சென்றடைந்தார் பிரதமர் மோடி!
PM Modi Live Updates: தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். நேற்று ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்தில் தங்கிய அவர், இன்று காலை 8.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் அரிச்சல்முனை கடலில் புனித நீராடுகிறார்.
அதன் தொடர்ச்சியாக கடல் மணலில் சிவலிங்கம் உருவாக்கி சிறப்பு பூஜை மற்றும் சங்கல்பம் மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து காலை 10.25 மணிக்கு தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலுக்கு வருகை தரும் பிரதமர், அங்கு காலை 11 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.