Paracetamol மருந்தால் கல்லீரலுக்கு அச்சுறுத்தல்., எலிகள் மீதான பரிசோதனை மூலம் உறுதி

Paracetamol மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

கடுமையான வலியில் இருந்தாலும், பாராசிட்டமால் மருந்தின் அளவு (Dosage) ஒரு நாளைக்கு நான்கு கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதிக அளவு இருந்தாலும், இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினாலும், கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி.

பிரித்தானியாவில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக (University of Edinburgh) விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய விடயங்கள் வெளியாகியுள்ளன.

எலிகள் மீது பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவற்றின் கல்லீரல் சேதமடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் எலிகளின் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளில் பாராசிட்டமாலின் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த மருந்து கல்லீரலுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள திசுக்களை சேதப்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.

‘கல்லீரல் திசுக்களின் அமைப்பும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *