Lok Sabha Election 2024: பிரதமர் மோடி வெற்றி பெற அமெரிக்காவில் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை

இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலகமே இந்த தேர்தலை உற்று நோக்கியுள்ளது. தேர்தலும் தேர்தல் முடிவுகளும் ஒரு புறம் இருக்க, தேர்தல் பிரச்சாரங்கள் வழக்கத்தை போலவே களைகட்டி வருகின்றன. தேர்தல் களத்தில் வாக்காளர்களை இழுக்க, கட்சிகள் பல வித உத்திகளை கையாள்கின்றன.

இதற்கிடையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்று, இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளூர் கோவிலில் சிறப்பு ‘ஹோமம்’ செய்ததாக பிடிஐ மூலம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஹோமம்

ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பிஜேபி (OFBJP), அமெரிக்க சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா சேப்டர் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது. பிரதமர் மோடியின் தலைமையை ஆதரிக்கும் பெரும்பான்மையான இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டு பிரார்த்தனையாக இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

“இந்த ஆன்மிகக் கூட்டம், இந்தியாவின் ஜனநாயகச் செயல்பாட்டில் மகக்ளுக்கு உள்ள ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையையும், பிரதமர் மோடியின் தலைமையில் தொடர்ந்து முன்னேற்றம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான மகக்ளின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது,” என்று OFBJP செய்தித் தொடர்பாளர் கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடி தலைமையிலாக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கின் (Silicon Valley) தொழில்நுட்ப மையத்தில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல்களில் மோடி வெற்றி பெற கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனைகளை செய்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏப்ரல் 19 தொடங்கும் மக்களவைத் தேர்தல்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும். தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அவையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில், அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024: முழு அட்டவணை
– முதல் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 19 ஆம் தேதி
– இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 26 ஆம் தேதி
– மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: மே 7 ஆம் தேதி
– நான்காம் கட்ட வாக்குப்பதிவு: மே 13 ஆம் தேதி
– ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: மே 20 ஆம் தேதி
– ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மே 25 ஆம் தேதி
– ஏழாம் கட்ட வாக்குப்பதிவு: ஜூன் 1 ஆம் தேதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *