சிவகார்த்திகேயனை கண்டுகொள்ளாத லோகேஷ்! தலைவர் 171 படத்தில் எடுத்த முடிவு?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்கான பணிகளை தொடங்கி அதன் வேளைகளில் பிசியாக இருக்கிறார்.
விரைவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை இயக்கி கொண்டிருந்த சமயத்திலே இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.
இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு கூட தொடங்காத நிலையில், படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய தகவல் அடிக்கடி வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.