பைஜு ரவீந்திரன் மீது லுக் அவுட் சர்குலர்.. அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை எடுக்கிறதா..?!
கடன் வலையில் சிக்கியுள்ள எட்டெக் நிறுவனமான Byju’s நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பைஜு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு அமலாக்க துறை, மத்திய குடிவரவு பணியகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பைஜு ரவீந்திரன் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்கனவே அவர் பெயரில் இருக்கும் லுக் அவுட் சர்குலர் உடன், புதிய லுக் அவுட் சர்குலர் வழங்க அமலாக்க துறை இந்த மாத தொடக்கத்தில் மத்திய குடிவரவு அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ரவீந்திரன் மீது ஏற்கனவே LOC நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது, கொச்சி அமலாக்க துறை அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக்கு பின்னர் அமலாக்க துறை பெங்களூரு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
LOC ஆன் இன்டிமேஷன் வெளியிடுவதன் மூலம் இமிகிரேஷன் அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நபர் வெளிநாட்டிற்குச் செல்லும் போது அத்தகவலை அமலாக்க துறைக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்படாது.
வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதி மீறல்கள் குறித்துப் பைஜூஸ் மற்றும் பைஜூ ரவிந்தரனை அமலாக்கத்துறையின் பெங்களூரு அலுவலகம் விசாரித்து வரும் வேளையில், ரவீந்திரன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அவருக்கு எதிராக LOC பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கருத்துத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரவீந்திரன் கடந்த மூன்று வருடங்களாக டெல்லி, துபாய், இடையே தொடர்ந்து பயணித்து வருகிறார், இந்த வார தொடக்கத்தில் அவர் பெங்களூருவில் இருந்ததாகத் தெரிகிறது.
பைஜு ரவீந்திரன் கடந்த வாரம் டெல்லிக்கு வேலை காரணமாகப் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாகவும், நாளை அவர் சிங்கப்பூருக்குச் செல்வதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் லுக் அவுட் சர்குலர் குறித்த மறுபரிசீலனை குறித்து அமலாக்க துறையின் முயற்சி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஆகியவற்றைக் குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பைஜூஸ் மற்றும் பைஜூ ரவிந்தரன் கடந்த சில வாரங்களாக முதலீட்டாளர்களிடம் இருந்து அதிகப்படியான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளையில் அமலாக்க துறையின் நோட்டீஸ் குறித்த செய்தி ஸ்டார்ட்அப் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.