Lord Mars: உள்ளே நுழையும் செவ்வாய்.. ராஜயோகம் இவர்களுக்குத்தான்

செவ்வாய் பகவான் மங்களகரகனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களின் தளபதியாக இவர் விளங்கி வருகிறார் இவர் வீரம், தன்னம்பிக்கை, மன தைரியம், விடாமுயற்சி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் அவ்வப்போது 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார்.

அதாவது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்கிறார். தற்போது செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த இடமாற்றத்தின் போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைவேறாமல் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

தனுசு ராசி

செவ்வாய் பகவான் உங்களுக்கு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்க போகின்றார். ஏனென்றால் உங்கள் ராசியின் முதல் வீட்டில் குடியேறப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் அதிகமாக கிடைக்கும் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டிற்கு செவ்வாய் பகவான் செல்லப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் இனிமையான பொழுது ஏற்படும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *