Lord Surya: சூரியனோடு பொங்கல் கொண்டாடும் ராசிகள் இவர்கள்தான்

நவக்கிரகங்களுக்கும் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்கி வருகிறார்.
இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் தைத்திருநாள் ஒன்றாம் தேதியான பொங்கல் அன்று சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். சூரிய பகவான் தனுசு ராசியின் உள்ளே செல்ல உள்ளார்.
இதன் தாக்கம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருந்தாலும் சூரியனின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டத்தை சில ராசிகள் பெற போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசி
சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. உங்கள் ராசியில் 11ஆம் வீட்டில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதோடு சேமிப்போம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும். பெற்றோர்கள் மகிழ்ச்சியாக உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
சூரிய பகவான் உங்களுக்கு மூன்றாவது வீட்டில் அமர உள்ளார். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.