உடல் பருமன் குறைய… இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!
உடல் பருமனை குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், எல்லோரும் அஞ்சும் அளவிற்கு அது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல.
நம்மால் முடிந்த சில எளிமையான, அதேசமயம் மிக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை இடைவிடாமல் கடைப்பிடித்தால் உடல் எடை குறைப்பது என்பது எளிதான விஷயம்தான்.
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கியமான விஷயம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்றால் மிகையல்ல. ஒரு புறம் உடல் பருமன் பிரச்சனை பொதுவாக உள்ள அதே நேரத்தில், மறுபுறம் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீட்டு வைத்தியம் மூலம் எடையை குறைக்க (Weight Loss Tips) நினைக்கிறார்கள். சிலர் டயட்டிங் மூலம் எடையை குறைக்க நினைக்கிறார்கள். சிலர் உடற்பயிற்சியை கடுமையாக செய்து, அல்லது ஜிம் செல்வதன் மூலம் உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
மேலே கூறப்பட்டுள்ள யுத்திகளை கடைபிடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஆனால், எப்போதுமே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும், உடல் பருமனை குறைத்து உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கும் சில எளிய உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் நல்ல பலன் அடையலாம்.