நண்பர்கள் இணைந்து வாங்கிய லொட்டரி: கூரையை பீய்த்து கொண்டு கொட்டிய பணமழை
அபுதாபியின் மிகப்பெரிய லொட்டரி குலுக்கலில் மலையாள இளைஞர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில்(Abu Dhabi) வசித்து வரும் மலையாள இளைஞர் ராஜீவ் அரிகாட்(Rajeev Arikatt) என்பவருக்கு லொட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளார்.
மலையாள இளைஞர் ராஜீவ் அரிகாட் அவருடன் பணிபுரியும் 19 சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து இந்த ஜாக்பாட் லொட்டரியை அடித்துள்ளனர்.
இதன் மூலம் அபுதாபியின் மிகப்பெரிய லொட்டரி குலுக்கலில் ரூ.34 கோடி(Dh 15 million) பரிசை வென்று அசத்தியுள்ளனர்.
வெற்றியை நம்ப மறுத்த ராஜீவ் அரிகாட்
சனிக்கிழமை நடத்தப்பட்ட அபுதாபியின் 260வது மிகப்பெரிய லொட்டரி டிராவில் ராஜீவ் அரிகாட் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இதனை முதலில் ராஜீவ் அரிகாட் மற்றும் அவரது நம்ப மறுத்துள்ளனர்.
லொட்டரி டிக்கெட் குழுவின் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு ஜாக்பாட் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர், இருப்பினும் தங்களால் இன்னும் நம்ப முடியவில்லை என்று ராஜீவ் அரிகாட் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் அரிகாட் அபுதாபியின் AI Ain பகுதியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.