அன்பிற்கு விலை மதிப்பே இல்ல – மகனின் முதல் வெற்றிக்கு கட்டிப்பிடித்து முத்தமிட்ட தந்தை – வைரல் வீடியோ!
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 5ஆவது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் விளையாடியது. இதில் ரோகித் சர்மா மற்றும் டிவேல்டு பிரேவிஸ் இருவரும் 40 ரன்களுக்கு மேல் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஹர்திக் பாண்டியா கூட 1, 6, 4 என்று ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து 12 ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு பிறகு சுப்மன் கில்லின் கேப்டன்ஷியை சீனியர் கிரிக்கெட் வீரர்கள் முதல் கிரிக்கெட் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் என்று பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவர்களையும் தாண்டி சுப்மன் கில்லின் தந்தை தனது மகனின் வெற்றிக்கு அவருக்கு முத்தமிட்ட காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/CricCrazyJohns/status/1772106400937943111