Luck: தனுசு ராசியில் உருவான 3 கிரக சேர்க்கை.. தொழிலில் சூப்பர் ஸ்டாராக மாறும் ராசிகள்

தனுசு ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்துவருகிறார். புதனும் தனுசு ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது செவ்வாய் பகவானும் சேர்கிறார். இதனால் ஆதித்ய மங்கள யோகமும், ராஜலக்னயோகமும் உருவாகிறது. இதனால் 5 ராசியினருக்கு சொத்து புதிதாக வாங்கும் யோகம் உருவாகியுள்ளது.

மேஷம்:

இந்த ராசியின் அதிபதி செவ்வாய் தனுஷில் தற்போது பயணித்து வருவதால் மேஷ ராசியினருக்குப் பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்போகின்றன. தொழில் முனைவோர் இந்தப் புத்தாண்டில் கணிசமான லாபங்களைப் பார்ப்பர். 2024ஆம் ஆண்டுக்குள் புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.

துலாம்:

செவ்வாய்,புதன், சூரியனின் கூட்டுச் சேர்க்கையால் சுயதொழிலில் மரியாதையாக சொல்லிக்கொள்ளும்படியான லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக அரசுவேலை கனவில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு ஆர்டர் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

இந்த ராசியினருக்கு செவ்வாயின் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். குடும்ப உறவினர்களுடனான சண்டை தீரும். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாகப் பார்த்து பேசுதல் நல்லது. வாகனங்களை ஓட்டினால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதையெல்லாம் தாண்டி, நீங்கள் நினைத்ததை வாங்கும் ஆண்டு இது.

தனுசு:

இந்த ராசிக்கு மூன்று கிரகங்களின் கூட்டுசேர்க்கையால் ராஜபோக வாழ்க்கை வாழ்வீர்கள். தொழில் மேம்படும். பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். காதல் வாழ்வில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறையபேரின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள்.

மீனம்:

இந்த ராசியினருக்கு, இவ்வாண்டு இறுதியில் யோகத்தால் பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாட்களாக நிறைவேறாத கனவுகள் எல்லாம் நிறைவேறும். புத்தாண்டில் உங்களின் சுயதொழிலில் எதிரிகளின் ஆட்டம் நீடிக்காது. உங்கள் கை ஓங்கும். சைடு பிசினஸ் தொடங்குவீர்கள். கணவன் – மனைவி இடையே சில பிரச்னைகள் வந்து மறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *