Lunar Eclipse 2024 : 100 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திர கிரகணம்.. பணத்தை அள்ளும் 5 ராசிகள்!!

இந்த முறை ஹோலி பண்டிகை அன்று இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் நிககழும். அதுவும் ஏறக்குறைய 100 ஆண்டுக்கு பிறகு, கிரக மண்டலத்தில் இப்படியொரு அபூர்வ நிகழ்வு நடக்கப் போகிறது. ஆனால் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்த சந்திர கிரகணம் நள்ளிரவில் மொத்தம் 4 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடிக்கும்.

அந்தவகையில், இந்த 2024 ஆண்டு சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி வருகிறது. எனவே, ஹோலி அன்று சந்திர கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களை தரும் என்பதை இப்போது பார்க்கலாம்.

மேஷம்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி பலன்களை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இறுதியாக ஒன்று கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: இந்த சந்திர கிரகணம் கன்னி ராசிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வணிகத்தை விரிப்படுத்த நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு இந்த சந்திர கிரகணம் மிகுந்த பலன் கொடுக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடியும். எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறுவார்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்: இந்த சந்திர கிரகணத்தால் மகர ராசிக்காரர்கள் மகத்தான பலன்கள் பெறுவார்கள். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். எதிர்பாராத பண லாபம் கிடைக்கும் புதிய வாகனம் வாங்குவீர்கள் பணியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *