100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திர கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்!
இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழப் போகிறது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்படவது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சந்திர கிரகணமானது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும், இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஹோலி மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நாளில் ஏற்பட உள்ளதால், அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இந்த சந்திர கிரகணம் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நிகழப்போகிறது. பொதுவாக கிரகணமானது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த அபூர்வ சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, சுப யோகம் உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் சுப பலன் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, அந்தஸ்த்து கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் சாதகமாக நடக்கும். வியாபாரம் விரிவடையும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். வேலையால் மகிழ்ச்சி பெறுவீர்கள்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் அதிர்ஷ்டம் தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலைகள் எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கலாம். முக்கியமான பொறுப்புகளை பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கலாம். வணிக வர்க்கத்தினருக்கு லாபம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் மிகவும் நன்மை பயக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப முழு பலன் கிடைக்கும். அறிவால் அங்கீகாரம் பெறுவீர்கள். புகழ் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் பெருகும், புதிய ஒப்பந்தங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகணத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். சுப பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகள் குவியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.